ஞாயிறு, 12 அக்டோபர், 2025

முருகனைப் போற்றும் வெண்பா

 முருகனைப் போற்று முருகிள நெஞ்ச

முருகிடுமே யோங்குவள ரன்பாற் - பருகநிதந்
தித்திக்குந் தேனாஞ் சிவமைந்தன் பத்தியதை
யெத்திக்கு மேத்திப் பழகு


முருகனைப் போற்றும் முருகு இள நெஞ்சம் உருகிடுமே ஓங்கு வளர் அன்பால் பருக நி(த்)தம் தித்திக்கும் தேனாம் சிவ மைந்தன் பத்தி அதை எத்திக்கும் ஏத்திப் பழகு

முருகனைப் போற்றும் அடியார்களும் அவனுடைய குணங்களைக் கொள்வார்கள் ஆதலால் அவர்கட்கும் அழகும் இளமையும் நிறைந்திருக்கும் தத்தமது நெஞ்சில், அவர்களது மனம் உருகி விடும் ஓங்கு வளர் அன்பால், அதைப் போன்று நித்தம் பருகப் பருகத் தித்திக்கும் தேனாகும் சிவமைந்தன்றன் பத்தியை எத்திக்கும் ஏத்திப் பழகுவோமாக





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி