வெள்ளி, 17 அக்டோபர், 2025

உண்டி சோறு விருத்தம்

 உண்டிசோறு நீரிலாடை கொண்டவேலை யோய்நிலை

பெண்டிர்வீடு சுற்றமுற்று பிண்டமண்டு பிணிவளந் 

தண்டமுண்ட சன்னியாச மென்றுமாய மாயவ

வண்டமுண்ட கண்டவிண்டு தண்டுழாய வாழியே 


உண்டி சோறு நீர் இல் ஆடை கொண்ட வேலை ஓய் நிலை

பெண்டிர் வீடு சுற்றம் முற்று(ம்) பிண்டம் அண்டு பிணி வளம்

தண்ட முண்ட சன்னியாசம் என்றும் ஆய மாயவ!

அண்டம் உண்ட கண்ட! விண்டு ! தண் துழாய ! வாழியே 


யாம் உண்ணும் உணவாகவும் சோறாகவும், பருகும் நீராகவும், ஒதுங்கும் உறைவிடமாகவும், செய்யும் வேலையாகவும் அதனின்று விலகி நிற்கும் ஓய்வு என்னும் நிலையாகவும், கொண்ட பெண்டிராகவும், மற்ற வீட்டின் சுற்றத்தினர் முழுதாகவும், பிண்டமாகிய இவ்வுடலில் அண்டும் நோய்களாகவும், அதை வெல்லும் ஆரோக்கிய நிலையாகவும், தண்டம் கையெடுத்து மொட்டை அடித்துக் கொள்ளும் சன்னியாச நிலையாகவும் என்று யாவும் ஆன மாயவனே, அண்டம் உண்ட கண்டனே, விஷ்ணுவே, தண் துழாய் மாலை அணிபவனே நீ என்றும் வாழியே !


You are our food, rice, water, home, clothes that we wear, our job, our rest, our women folk, all our relatives, the two fold states of the body of health and disease, the state of sanyasa holding a Dhanda(staff) and tonsuring the head, oh Mayava, the one who has a neck that consumes all worlds during dissolution(pralaya) oh MahaVishnu, the one who wears cool Thulasi Garland may you live on!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி