வியாழன், 16 அக்டோபர், 2025

ஒன்றுமற்ற விருத்தம்

 ஒன்றுமற்ற நிலைகிடப்ப வொன்றதான வோர்பொருள் 

ஒன்றினின்றி யாவுமாக வுருவமைத்த வோர்பொருள்

ஒன்றினின்று விலகிச்செல்ல வூக்கிவிக்கு மாயையா 

கன்றுமேய்ப்ப கண்ணமன்ன காலநேமி காலனே 



ஒன்றும் அற்ற நிலை கிடப்ப ஒன்று அது ஆன ஓர் பொருள்

ஒன்றினின்று யாவுமாக உரு அமைத்த ஓர் பொருள்

ஒன்றினின்று விலகிச் செல்ல ஊக்குவிக்கும் மாயையா !

கன்று மேய்ப்ப ! கண்ண ! மன்ன ! காலநேமி காலனே !


ஒன்றும் அற்ற சூனியம் என்னும் நிலையில் கிடந்தவனும் நீ தான் , ஒரே பரப் பிரம்மாக மிளிர்ந்தவனும் நீ தான், அந்த ஒன்று பலவாறாக விரிய உள்ளிருந்து உரு அமைப்பவனும் நீ தான், உண்மையான ஒன்றை (உன்னை) விலகிச் செல்லும் படியாக உயிர்கட்குப் பாதையை மாற்றி அமைத்து விளையாடும் மாயா சத்தியும் நீ தானே ! கன்று மேய்ப்பனாகிய கண்ணனே என் மன்னனே கால நேமி என்னும் அசுரனின் காலனே !


You are the one who is to be understood by nothingness or Shunya, you are also the one Parabrahman which is substratum for everything to evolve by making the one into many and giving the various forms! You are also the force of Maya which deludes the Jivas from attaining the singular truth that is yourself arent you Oh Cowherd Krishna, my lord, the Lord of death to the Asura kAla nEmi !






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி