வேடன் வடிவி லருள்வோனை
வேதன் றலையொன் றரிவோனைக் கூட னகரி லரசாளும் கோலக் கயலா டலைவோனை
ஆடுங் கலையின் முதல்வோனை
ஆலி னிழலில மர்வோனை
நாடு மனமே நமையாளு
நாளென் றிறைவா நவிலாயே
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக