செவ்வாய், 16 டிசம்பர், 2025

பொருப்பரசன் வெண்பா

பொருப்பரசன் பேரா புனச்சிறுமான் கேள்வா

விருப்பரசி ஒன்றமைத்த வேலா - திருப்புகழின்

நாதா மருப்பொசித்த மாயன் மருகாவுன்

போதலர்த்தாள் போற்றப் பணி 




பொருப்பு அரசன் பேரா! புனச் சிறு மான் கேள்வா

விருப்பு அரசி ஒன்று அமைத்த வேலா! திருப்புகழ்

நாதா மருப்பு ஒசித்த மாயன் மருகா! உன் 

போது அலர் தாள் போற்றப் பணி 


மலை அரசனின் பேரனே, புனச் சிறுமான் வள்ளி தேவியின் கேள்வனே, விருப்பரசியான காமாக்‌ஷி ஆறு முகங்கள் ஒன்று சேரத் தழுவிய, மற்றும் அவள் கொடுத்த வேலை வாங்கி வென்ற வடிவேலனே திருப்பகழின் நாயகனே குவலய பீட யானையின் கொம்பை ஒடித்த மாயனின் மருகனே, உனது மலர் போன்ற தாள்களையே போற்றுவதாக எம்மைப் பணிப்பாயாக 


Grandson of king of mountains, Lord of deer like young girl who sports the forest VaLLi, Kamakshi hugged you and made the six forms into one and handed you over the vEl which you used for victory, hero of thiruppugazh, and nephew of Mayan(Krishna) who broke the tusk of the kuvalaya peeta elephant, kindly grant us the bhakti and knowledge to keep extolling your holy feet!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி