மார்கழி மாத மழையொ டலர்ந்தது
கார்முகில் வண்ணன் கருணை பொழிந்தது
நேர்நிக ரில்லா நிமலன் பெயர்சொல்லித்
தேர்கரங் கொண்டரு டேவ னினைவுள்ளி
வார்புன லாடி வடிவார் மகண்மார்பன்
சார்வடி யாரொடு சேர்ந்து தொழுதெழச்
சீர்கழன் மாதவன் சித்தந் தெளிவிப்பான்
ஏர்கதிர் வந்தா னெழும்பேலோ ரெம்பாவாய்
மார்கழி மாதம் மழையொடு அலர்ந்தது
நேர் நிகர் இல்லா நிமலன் பெயர் சொல்லி
தேர் கரம் கொண்டு அருள் தேவன் நினைவு உள்ளி
வார் புனல் ஆடி வடிவார் மகள் மார்பன்
சார்வு அடியாரொடு சேர்ந்து தொழுது எழ
சீர் கழல் மாதவன் சித்தம் தெளிவிப்பான்
ஏர் கதிர் வந்தான் எழும்பு ஏலோர் எம்பாவாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக