வியாழன், 4 டிசம்பர், 2025

நண்பர்கள் பெயர்களைக் கொண்டொரு குறள் வெண்பா

கார்த்திகை மாதீபங் காணத் தரமேசு

மார்த்தி மதமீறா கொங்கு 


சீர் பிரித்து -

கார்த்திகை மா தீபம் காணத் தரமே சுமார்த்தி மதம் ஈறு ஆ கொங்கு 


கார்த்திகை மாதீபத்தைக் காணத் ஒரு விதமான உயர் தரம் உண்டாகும், அது யாதெனில்,  சுமார்த்தி (ஸ்மார்த்த - வேத) மதத்தின் ஈறு ஆ (இறுதியான வழி) ஆன அமுது (கொங்கு) . 


கார்த்திகை மஹாதீபத்தைத் தரிசிப்பதே வேத மதத்தின் இறுதி இலக்கான வீடு பேற்றை வழங்கக் கூடிய வழியான அமுதத்தைப் போன்றது என்பது கருத்து 

இதில் கார்த்திகை- கார்த்திக்கையும், ரமேசு - ரமேஷையும், ஆர்த்தி (சுமார்த்தியின் பகுதியாக) மீறா(சாய் மீரா) கொங்கு (கொங்குவேள்) தத்தமது பெயர்களையும் குறிக்குமாறு இயற்றப் பெற்றது 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி