ஆணவத்தை விட்டொழித்த வானைதனைக் காத்தானைத்
தூணுதித்துத் தூய சிறுவனைக் காத்தானைக்
காணவந்த நட்பவலைக் கண்ணமுதாய்க் கொண்டானை
மாணியாக வந்துலகின் மூன்று மளந்தானை
நாணொழிந்து நம்பிவந்த ஆயர்த நாயகனைப்
பூணொழிந்து நோன்புற்ற பூமாலை சூடியிவள்
வாணிமகிழ் தேனோசை வஞ்சி தமிழ்ப்பாவை
தோணியென பற்றிச் சுகித்தேலோ ரெம்பாவாய்
ஆணவத்தை விட்டு ஒழித்த ஆனைதனை காத்தானை
தூண் உதித்து தூய சிறுவனை காத்தானை
காண வந்த நட்பு அவலை கண் அமுதாய் கொண்டானை
மாணியாக வந்து உலகின் மூன்றும் அளந்தானை
நாண் ஒழிந்து நம்பி வந்த ஆயர்தம் நாயகனை
பூண் ஒழிந்து நோன்பு உற்ற பூ மாலை சூடியவள்
வாணி மகிழ் தேன் ஓசை வஞ்சி தமிழ் பாவை
தோணி என பற்றி சுகித்து ஏலோர் எம்பாவாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக