புதன், 31 டிசம்பர், 2025

மார்கழி -11

கற்றுத் தெளிந்தபல காவியத்தின் சாரத்தைக்

கற்றுக் கறவை கறந்த கனியமுதை 

முற்று மறிந்த முகுந்தனை மோகனனை 

நெற்றித் திரள திருமணணி வேந்தனை 

முற்றுந் துறந்து முழுமனதோ டேற்றுவந்து 

வெற்றித் தமிழ்மணம் வீற்றிரு மாலையைப்

பெற்றுப் புகழ்தரும் பேதைசொல் பாவையை

உற்றுப் பணிவோம் உகந்தேலோ ரெம்பாவாய்


கற்றுத் தெளிந்த பல காவியத்தின் சாரமான, கன்றுக் கறவைகளை கறந்து லீலைசெய்யும் கனியமுதான, முற்றும் அறிந்த முகுந்தனை, மோகனனை, நெற்றித் திரளத் திருமண் அணியும் வேந்தனை, வெற்றித் தமிழ் மணம் வீசு மாலையைப் புனைந்து, புகழ் பெற்றுதரும் கோதையின் பாவையை யாம் உற்றுப் பணிவோம் உகந்து !




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி