வெள்ளி, 2 ஜனவரி, 2026

மார்கழி- 13

புள்ளின் முகமுடைத்தான் புள்ளின் கொடியுடைத்தான் 

புள்ளி வடிவெடுத்துப் புங்க மறையுரைத்தான் 

புள்ளி னிறுதிவினை போற்றிச் சுயம்புரிந்தான் 

புள்ளின் விழியறுத்தான் பூட்டு சகடுதைத்தான் 

வள்ளற் குணமுடைத்தான் வாழ்த்தித் தமிழ்மாலை

துள்ளு மிசைவடிவிற் றுங்க புதுவைமகள்

உள்ளத் துயர்வெண்ணி யூட்டு திருவருளை 

யள்ளி யருந்து விழைந்தேலோ ரெம்பாவாய்   

புள்ளின் முகம் உடைத்தான் புள்ளின் கொடி உடைத்தான் 

புள்ளின் வடிவு எடுத்து புங்க மறை உரைத்தான் 

புள்ளின் இறுதி வினை போற்றி சுயம் புரிந்தான் 

புள்ளின் விழி அறுத்தான் பூட்டு சகடு உதைத்தான் 

வள்ளல் குணம் உடைத்தான் வாழ்த்தி தமிழ்மாலை 

துள்ளும் இசை வடிவில் துங்க புதுவை 

உள்ளத்து உயர்வு எண்ணி ஊட்டு திரு அருளை

அள்ளி அருந்து விழைந்து ஏலோர் எம்பாவாய் 


புள் முறையே பகாசுரன், கருடாழ்வார், ஹம்சாவதாரம், ஜடாயு, காகாசுரனைக் குறிக்கின்றது. புதுவை மகள்- ஆண்டாள் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி