வெள்ளி, 2 ஜனவரி, 2026

நாதவிந்து விருத்தம்

 நாதவிந்து ஞானரூப நாகவெற்ப பாரதச்

சூதுவென்ற துட்டர்நூறத் தேர்நடத்து மாதவன்

மாதுபெற்ற மான்மணக்க கிழவனான குமரநின்

பாதமுற்ற வேடுகற்க வெத்தவத்தை யாள்வதே 


நாத விந்து ஞான ரூப! நாக வெற்ப! பாரத

சூது வென்று துட்டர் நூற தேர் நடத்து மாதவன்

மாது பெற்ற மான் மணக்க கிழவனான குமர! நின்

பாதம் உற்ற ஏடு கற்க எ தவத்தை ஆள்வதே 


நாதமாகவும் விந்துவாகவும் உள்ள ஞான ஸ்வரூபனே திருச்செங்கோடனே பாரத்ப் போரில் சூதால் வென்ற துட்டர்களான கௌரவர்கள் அழிய தேர் நடத்திய மாதவன் மனைவியான இலக்குமி பெற்ற வள்ளி தேவியாகிய மானை மணக்க கிழவன் வேடம் தரித்த குமரனே நினது பாதம் உற்ற ஏடான திருப்புகழைக் கற்க எவ்வகையான தவத்தை ஆள வேண்டும் என்று உரைப்பாயாக !




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி