திங்கள், 5 ஜனவரி, 2026

மார்கழி -14

நாவுடையார் நின்றேத்து நாயகனை யென்றென்றுஞ்

சாவறியா ருள்ளுள்ளுஞ் சர்ப்ப சயனனை 

மாவலிபால் யாசித்த மாணியை மாவடிவை 

யாவர்க்கு மாதியை யாண்டுமுறை மூலத்தை 

நோவறியா  நுங்கட்கு வீடளித் தாள்வானைப்  

பாவடிவிற் பாங்குரைத்த பல்லுயுரு முய்யவவன் 

சேவடிசேர் சீர்வழியைச் செப்பலுற்ற கோதைபுகழ்

நாவளர நாட்டு நயந்தேலோ ரெம்பாவாய்




நா உடையார் நின்று ஏத்து நாயகனை என்றென்றும் 

சாவு அறியார் உள் உள்ளும் சர்ப்ப சயனனை 

மாவலி பால் யாசித்த மாணயை மா வடிவை 

யாவர்க்கும் ஆதியை யாண்டும் உறை மூலத்தை 

நோவு அறியா நுங்கட்கு வீடு அளித்து ஆள்வானை 

பா வடிவில் பாங்கு உரைத்த பல் உயிரும் உய்ய அவன் 

சே அடி சேர் சீர் வழியை செப்பல் உற்ற கோதை புகழ்

நா வளர நாட்டு நயந்து ஏலோர் எம்பாவாய் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி