செவ்வாய், 6 ஜனவரி, 2026

பரங்குன்ற செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

 பரங்குன்ற நீயே பரம்பொருளே வேளே

மரமொன்றிற் றீப மலர - வரந்தந்து
காத்தாய் வடிவேலா கார்மயில் வாகனா
வேத்தவுனை யேற்றதின மின்று


பரங்குன்றம் நீயே பரம் பொருளே வேளே மரம் ஒன்றில் தீபம் மலர வரம் தந்து காத்தாய் வடிவேலா கார் மயில் வாகனா ஏத்த உனை ஏற்ற தினம் இன்று



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி