செவ்வாய், 27 ஜனவரி, 2026

மேலை நாடு விருத்தம்

 மேலைநாடு சென்றபோதும் வேல்விடுத்த தேவனைக்

காலைமாலை யுள்ளமெண்ணு காதன்மாற லாகுமோ
ஆலவாயன் காதுசொன்ன வாதியான மந்திரம்
ஞாலம்யாவும் வந்துதிக்க ஞானமீனு வேலனே

மேலை நாடு சென்ற போதும் வேல் விடுத்த தேவனை காலை மாலை உள்ளம் எண்ணு காதல் மாறல் ஆகுமோ ஆலவாயன் காது சொன்ன ஆதி ஆன மந்திரம் ஞாலம் யாவும் வந்து உதிக்க ஞானம் ஈனு வேலனே !



மேலை நாட்டிற்கு யாம் சென்றாலும் வேல் விடுத்த தேவனான முருகனைக் காலையும் மாலையும் உள்ளத்தால் எண்ணிக் காதலுறுதல் என்பதை மாற்றல் ஆகுமோ? திருவாலவாய் சேத்திரத்தின் இறைவனான சிவ பெருமானுக்கே காதில் அவன் ஆதியான பிரணவமந்திரத்தை உரைத்தவன் ஆயிற்றே, அம்மந்திரத்தாலே ஞாலம் யாவும் உரு பெறுகின்றதன்றோ, அஞ்ஞானத்தை தருபவன் எமது வேலவனேயாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...