செவ்வாய், 20 ஜனவரி, 2026

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் 

பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும்

பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம்

பழுதே துதியாத் திதி 



விருப்பும் செயலும் வினை நீக்கு வேலும் 

பொருப்பின் அரசன் புடை சூழ்ந்து இருக்கும்

பொழுது புவியே பொலியும் சுவர்க்கம்

பழுதே துதியாத் திதி 


இச்சா சக்தியாகிய வள்ளி தேவியும் கிரியா சக்தியாகிய தெய்வானை தேவியும் வினை நீக்கும் ஞான சக்தியாகிய வேலும் மலையின் அரசனான முருகன் புடைசூழ்ந்து இருக்கும் பொழுது இப்புவியே சுவர்க்கம் எனப் பொலியும்! அத்தகைய முருகனைத் துதியாத நாள் யாவும் பழுதேயாம் 

Icha Shakti (Valli Devi) Kriya Shakti (Devasena Devi) and the vEl which is the gnana shakti which removes all karma are all together flanking the Lord of Mountains (Murugan) and when this is the case this world itself shines as the heavens! Understanding this every moment that goes without worshipping the great Lord Murugan is wasted 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி