மலையுயர்த்தி மழைதடுத்த மாயவாய னுறுதியும்
சிலைவளைத்துக் கரம்பிடித்த சீதைகேள்வ னுறுதியும்
தொலைநிலத்தை நிலைநிறுத்து சூகரன்ற னுறுதியும்
நிலைநிறுத்தி நினைவகற்ற நித்தமுத்தி சித்தியே
மலை உயர்த்தி மழை தடுத்த மாய ஆயன் உறுதியும்
சிலை வளைத்து கரம் பிடித்த சீதை கேள்வன் உறுதியும்
தொலை நிலத்தை நிலை நிறுத்து சூகரன் தன் உறுதியும்
நிலை நிறுத்தி நினைவு அகற்ற நித்த முத்தி சித்தியே
கோவர்த்தன கிரியை உயர்த்தி மழையினின்று காத்த கண்ணன் கொடுத்த உறுதியும் (சரம சுலோகம்)
வில்லை வளைத்து ஜானகியைக் கரம்பிடித்த ஸ்ரீ ராம பிரான் அளித்த உறுதியும்,
தொன்மையான உலகை (பூமிப் பிராட்டியை) வராஹ அவதாரம் எடுத்து மீண்டு அவள் இருந்த நிலையில் நிறுத்திய பெருமான் கொடுத்த உறுதியும் என்றும் நம் மனதில் நிலை நிறுத்தி பிற நினைவுகளை அகற்ற நமக்கு நித்யமான திருநாடும் முத்தியும் சித்தியாகும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக