
ஓரில் லாளன் ஒற்றைச் சொல்லான் ஒன்றே பாணம் என்றே இருந்தான்
ஈரா சான்கள் வித்தை கொடுத்தர் இளையோர் இவற்கு மூன்றும் ஆமே
நாரா யணனின் அம்சம் அதனால் நான்கு வேதம் போற்றும் பொருளாம்
போரில் செற்றான் ஐயீர் சிரத்தோன் பாரில் அமைதி நிலவச் செய்தான்
பேற்றை அருளும் புருடோத் தமனைப் போற்றிப் பணியும் ஏழே ழுலகும்
ஏற்றம் தந்தான் காற்றின் புதல்வற்(கு) எட்டுத் திக்கும் புகழும் பரவ
வீற்றான் உலகில் நவமித் திதியில் மேன்மை தந்தான் பத்தி ரதற்கு
எண் வரிசையாக அமைந்த இரண்டு எண்சீர் ஆசிரிய விருத்தங்கள்.இராம நவமியன்று தோன்றிய எண்ணலங்காரப் பாடல் , ஒன்றிலிருந்து பத்து வரை இவ்விருத்தங்களில் பயிலப் பட்டுள்ளன
ஈராசான்கள் - வசிஷ்டர் , விசுவாமித்திரர்
ஆற்றைக் கடக்க ஆறமைத்தான் - குகன்
காற்றின் புதல்வன்- ஆஞ்சநேயன்
ஐயீர் சிரத்தோன் - இராவணன்
பத்து இரதன் - தசரதன்
ஏழேழுலகு - எண்ணிலடங்கா உலகங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக