புதன், 17 மே, 2023

எண்ணலங்காரம்

 படம்

வேலொன்று மாதிரண்டு முக்கா லுமுணர்ந்த நாலென்று மையா றெழுவனை யெட்டா நவநா ளுதித்த தசானனக் கால னுவந்த மருகனை யுள்ளு -வெண்பா

வேல் ஒன்று மாது இரண்டு முக்காலும் உணர்ந்த நாலு என்றும் ஐயாறு எழுவனை எட்டா நவநாள் உதித்த தசானனக் காலன் உவந்த மருகனை உள்ளு முக்கால்- மூன்று காலம் நாலு -வேதம் ஐயாறு- கங்கை 

ஐயாறு எழுவனை - முப்பது அடிப்படை எழுத்தாக கொண்ட செந்தமிழின் எழுவாயாக விளங்குபவனை ( முருகனை) என்றும் வேறுபட்டும் பொருள் கொள்ளலாம்  

 நவ நாள் -நவமி , உலகிற்கு புதிய விடியல் தசானனன்- இராவணன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி