வியாழன், 20 ஏப்ரல், 2023

எண்ணலங்காரம்

ucan: Murugan pictures

 

 

மூவீ ரானனா முத்தமி ழுத்தமா
வோது நான்மறை யோர்க்குமு யர்தனி
ஆவி னன்குடி ஆண்டியப் பாவெம
தாவி ஐந்திலு ழன்றுபா ழாவிர
மேவு மாறிரு உன்பணைத் தோளெமை
ஏழு குற்றமு நீக்கியே காத்திட
பாவி னெண்ணுத லொன்பது வாசலின்
பாவி பத்தியுஞ் சண்முகா வந்துறை
-கட்டளைக்கலிப்பா


மூவீர் ஆனனா முத்தமிழ் உத்தமா
ஓதும் நான்மறை ஓர்க்கும் உயர்தனி
ஆவினன்குடி ஆண்டியப்பா, எமது
ஆவி ஐந்தில் உழன்று பாழா இர,
மேவும் ஆறிரு உன்  பணைத்தோள் எமை,
ஏழு குற்றமும் நீக்கியே காத்திட,
பாவின் எண்ணுதல் ஒன்பது வாசலின்
பாவி பத்தியும், சண்முகா வந்து உறை

ஆறுமுகம் கொண்ட முத்தமிழ் உயர்த்தும் உத்தமனே , ஓதும் நான்மறை ஆராயும் உயர்தனி ஆவினன்குடி வாழ் ஆண்டி அப்பனே எமது ஆவி ( உயிர்) ஐந்து புலன்களில் ( ஐந்தில்) உழலாது இருக்க , மேவும் உனது பன்னிரண்டு பணைத்தோள்கள் ஏழு விதமான குற்றங்களும் எம்மிடம் நீக்கி காக்கட்டும் இந்த ஒன்பது வாசல் கொண்ட (எனது உடல்) பாவியின்   எண்ணத்திலும் பத்தியிலும் சண்முகா நீ வந்து உறைவாயாக

ஆனனம் - முகம்
ஓர்தல் - ஆராய்தல்
ஏழு குற்றம் - நாட்டுக்கு வரும் குற்றங்கள் ஏழு:- விட்டில், தொட்டியர், பன்றி, கள்வர், அவமழை, யானை, கிளி.

மூவீர் ஆனனா முத்தமிழ் உத்தமா
ஓதும் நான்மறை ஓர்க்கும் உயர்தனி
ஆவினன்குடி ஆண்டியப்பா, எமது
ஆவி ஐந்தில் உழன்று பாழா இர,
மேவும் ஆறிரு உன்  பணைத்தோள் எமை,
ஏழேழ் சென்மமு மாசறக்  காத்திட,
பாவின் எண்ணுதல் ஒன்பது வாசலின்
பாவி பத்தியும், சண்முகா வந்து உறை

"ஏழேழ் ஜென்மமும் ஆசறக் காத்திட" என்பது மட்டும் வேறு பாடு

அனைத்து பிறவிகளிலும் குற்றிமின்றி காப்பாயாக என்ற பொருளில் 

 

எண்ணலங்காரமாக புனைய மற்றுமொரு சிறு முயல்வு 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...