சனி, 3 ஜூன், 2023

வைகாசி விசாகம்

 

ஈசனுதற் தேசவிழி வீசுபொறி ஆசுகனும்
காசினியில் மாசறுக்கும் ஆசுநதி வாசஞ்செய                வீசிடவே
 

தேசுடைய பீசமதும் சேயுருவம் ஆறெடுத்துப்
பாசமுள ஆறனையர் அன்பதற்குப் பாத்திரமாய்          வீற்றிருந்த

நேசமுடைப் பாசுபதன் பாகமொரு வாசஞ்செயும்
தேசுமிகு மாசுனையள் ஆறுருவும் ஓருருவாய்                ஆக்கியதால்

மோசஞ்செயும் தானவரின் காலயெலை ஞாலமதில்
தீருமென வானவரும் மானவரும் பூரிப்பில்                      ஆழ்ந்தனரே

9 சீர் ஆசிரிய விருத்தம் 



ஆசுகன்= வாயு தேவன்
மாசறுக்கும் ஆசு நதி = கங்கை
மாசுனை= சரவணப் பொய்கை - பார்வதியின் அம்சம்
மாசுனையள் = பார்வதி
மானவர் = மானிடர்
பீசம் =வித்து 


படம்

அயர்வுறுஞ் சீவற் கருள்தர வல்ல வுயர்வனை யின்றெண்ணி யுய்வோம் - துயருற்ற வாகாச வாசி யகங்கா வவதரித்த வைகா சிவிசாக வேந்து -வெண்பா

ஆகாச வாசி - விண்ணவர் 
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி