சனி, 22 ஜூலை, 2023

திருவாடிப் பூரம்

படம்  

வாரண மாயிரம் வடிவா யமைத்து நாரண னம்பியி னற்கரம் பிடித்து ஆரண மனைத்து மடங்கு விதமாய் ஏரணந் தவறா இறைவி பகர்ந்தாள் -கலி விருத்தம்

 

 

வாடாத் தமிழ்மாலை வையஞ் சுவைக்க வடித்தவளை
கூடாரை வெல்லும்சீர் கோவிந் தனுவக்க கோதைதனைச்
சூடிக் கொடுத்த சுடர்கொடி யைநாம் துதிப்போம்திரு
வாடிப்பூ ரந்தனில் ஆள உதித்த பிராட்டியையே
-கட்டளைக்கலித்துறை
 
 
பிராட்டி புவியிற் பிறந்த தினத்திற்
பிரானி னருளைப் பெறவே - பெரியாழ்வார்
கோதை இயற்றிய கோதிற் றமிழ்மாலை
பாதை எனவுணர்ந்து பாடு
-வெண்பா
 
May be an image of 1 person and temple 
 
பாடு பொருளாய்ப் பரமனைக் கொண்டு
நாடு பொருளா நாரணனை துதித்துச்
சூடிக் கொடுத்தாய்ச் சுந்தரர்க்கு மாலை
ஈடி லாத இறைவியே
ஆடிப் பூரம் அவதரித் தாயே
-ஆசிரியப்பா
 
May be an image of 1 person and temple 
 
தாயே தந்தையரு ளுயிர்பெறவே
தரணி வந்தடைந்த திருநாளாம்
மாயன் மன்னுபுகழ் தமிழ்செயவே
மடவா ளணிபுதுவை அவதரித்தாள்
காயம் மனஞ்சித்தி ஒருங்கிணைந்து
கருத்தை கண்ணன்பால் வைத்திடவே
ஓயாப் பிணிவிலக வாழ்வதனி
லுள்ளு கோதையவள் பாமாலை
-அறு சீர் விருத்தம்
 
May be an image of 2 people and temple 
 
 
 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி