சனி, 22 ஜூலை, 2023

திருப்போரூர் கந்த சுவாமி

ஆரூ ரழகனை யாட்கொண் டருளிய
ஆரூ ரழக னனல்மகனே - போரூ
ருறையு மழக னுனைத்தொழ வூழின்
முறைமை யமைந்த துவப்பு

Murugan Temple Tirupporur, India | Best Time To Visit Murugan Temple 

 

 

அறமில்லை சற்றும் அறிவில்லை பாடும் திறமில்லை என்றாலும் தேர - பிறவிபல வேரூன்றி நிற்கும் வினையகல வாழ்வினில் போரூரன் றாளே புகல்

-வெண்பா 

புகலொன் றறியேன் புனிதா உனையன்றி
அகலிரு விசும்பை யடைகாக்கு மரசே
நமன்றூதர் நாடு நேரத்திற்
சமரா புரிவாழ் சண்முகன் சரணம்

-அகவல்  

சரண முனதடிக் கீழென்றும் மாய தரணிதனில் மரண மெனைய ணுகுநே ரமதில் மயில்மிசைவந் தரணு மெனக்க ருளியு னதுல கழைத்தெனையும் தருண மதிற்கதி தாவம ராபுரி வாழரசே

-கட்டளைக் கலித்துறை 

அரசுக் கெல்லாம் அரசே அடிமை செய்வேன் உனதாள் சிரசிற் பட்டால் ஒழியும் தீராப் பாவம் பலவும் இருதாள் என்றும் எமக்கா ரிருளை நீக்கு மருந்து அருளின் ஊற்றே சமரா புரிவாழ் கந்த சுவாமி

-அறுசீர் விருத்தம்    

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி