திங்கள், 21 ஆகஸ்ட், 2023

பத்திராசலம் இராமர் விருத்தம்

May be an image of text

 

ஏது மற்றவர் ஏழை எளியவர்

ஏற்றம் பெற்றிட ஏத மற்றுற வழியாக

ஈரி லற்றவர் ஏக சொற்றவர்

வேத வுத்தமர் மேக வொத்தவர் நிறநாதா


மாதை யற்றதோ ரூறை யற்றுற

ஆழி சூழ்திரு நாட்டின் கொற்றவன் தலைவீழ

வாதிற் செற்றுடன் மாதை மீட்டவி

ராம சந்திர ராஜ தத்துவ புருஷோனே


சாத கஞ்செய சாமி யைத்தொழ 

சால வுஞ்சிரத் தையாம் பத்திரன் மனதார

சான கித்துணை சானு ஜன்வர

தானு டன்மகிழ் காட்சி யைத்தர விழிகாண


சோத னைசில தாச னுக்கெழ

தூய வன்தர சேவ கற்குறு சிறைவாழ்வே

வேத னைக்கழி நாத ரைத்தொழு

கீத மும்பெறு பத்ர குன்றுறை பெருமாளே

















 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...