புதன், 20 செப்டம்பர், 2023

கரந்துறை ,காதைகரப்பு

 மாதுவந்தார் மாதேகத் தாமைமா வெண்கலக்கோ காதைக்கூ காப்புளப் போருவக பங்கயப் பாதவுள வேணுருகு குன்றகன் றாநிமல பாதகத் தீருலகு தா இன்னிசை வெண்பா #கரந்துறை #காதைகரப்பு

 

 

மாதுவந்தார் - பெண்ணாக வந்த மோஹினி , மாது உவந்த அழகை உடையவனே ( இராமா) மாதேக ஆமை - கூர்மம் மா = வராஹ / நரசிம்ம வெண்கலக்கோ - வெண்ணிறம் உடையவனே ரேவதியின் நாதா , கலம் = ரேவதி காதைக்கு ஊகாப்பு காதை= வேதம், அதற்கு காப்பாக வந்த மத்ஸ்ய

பங்கயப்பாதவுள = தாமரைப் போன்ற பாதங்கள் உடையவனே வேனுருகு =மனம் உருகும் படி புல்லாங்குழல் இசைப்பவனே - கண்ணா உளப்போருவக = ஷத்ரியர்களை அழிக்க போர்களை விரும்பி செய்தவனே (பரசுராமா) குன்றகன்றா = முதலில் குள்ளமாக வாமனனாக வந்து பிறகு அகன்று த்ரிவிக்ரமனாய் நின்றவனே

 

நிமல = மலங்கள் அற்றவனே பாதகத்தீர் உலகம் தருவாயாக

இதற்குள் பின்னிருந்து ஒவ்வொரு எழுத்து நீக்கி சென்றால் இகுறள்வெண்பா அடக்கம் குருத்தல நின்ற குருவே வுபாயங் கருப்புகாக் காக்கவெமைத் தேர்ந்து
 
குருத்தலம் = குருக்க்ஷேத்ரம் கருப்புகா = இன்னொரு கருவில் நாம் பிறந்திடா முக்தி தருபவனே குருக்க்ஷேத்ரத்தில் நின்ற கிருஷ்ணபரமாத்மாவே நமக்கு தீர்வாம் முக்திக்கு எனும் பொருளில்
 
படம்  
 
படம் 

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி