வெள்ளி, 22 செப்டம்பர், 2023

மடக்குச் செய்யுள்

மாதவனு மாதவனு
மாதவனு மாதவனு
மாதவனு மாதவனு
மாதவனு மாதவன்
-வஞ்சித்துறை

 
மாது அவனும் மாது அவனும்
ஆதவனும் ஆதவனும்
ஆது அவனும் மாதவனும்
ஆதவனும் மாதவன்

மாதாக வந்தவனும் ( மோஹினி) மாது அவனும் ( அழகானவனும்) ஆதவனும் ( சூரியனாயிருப்பவனும்) ஆதவனும் ( ஆக்களின் தவப்பயனாக நிற்பவனும்) ஆது அவனும் ( உயர்வானவனும் ) மாதவனும் ( நரனாக வந்து பெரிய தவம் செய்தவனும் ) ஆதவனும் ( அவனுக்கு ப்ரகாசிக்கும் குருவாக நாராயணனாக வந்தவனும்) மாதவன் ( கண்ணன் அல்லது நாரயணன் ஆவான்


Could Shree Krishna stop the Mahabharata? - Quora

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி