செவ்வாய், 19 செப்டம்பர், 2023

காதைகரப்பு

 பாவியுரி தேசவுடை பாததலை வேயவிரு மேவுதரு தேவ வினியலை - யாவி சிரகவி தூய சிவகலை யோதி யரிவபுவ ரற்குடி லை -நேரிசை வெண்பா #காதைகரப்பு

 

பாவியான கஜாசுரனின் உரியை தேச உடையாய் தரித்தவனே , பாத தலை இரண்டும் மறைவாய் வைத்துள்ளவனே ( அரி அயனிற்கு) ( வேய விரு ) விரும்பத்தக்க காமதேனுவை போனறவனே (மேவுதரு) , தேவர்களுக்கு இனியவன் உன்னைனையும் உனது ( குடில்) கோவிலையும்

( சட்டைநாதராக ஹரியை உனது உடலாக நீ அணிந்திருக்கும் சீர்காழி கோவிலில் ) ஆவிகள் ( பசுக்கள் / ஆன்மாக்கள்) தூய தலைசிறந்த கவிகள் ஓதியும் சிவகலைகள் பயின்றும் வந்திக்குமாக

ஒவ்வொரு இரண்டாம் எழுத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இவ்வஞ்சித் துறை வரும் விரிச டைதலை யருவுரு வனிலை விரவி யவலை திரிபு ரகுலை

படம்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி