செவ்வாய், 19 செப்டம்பர், 2023

காதைகரப்பு

கல்வியணி செய்துன்ன கையுள்வா ரானையு முந்திகத்தை யேறானை யோகவுயர் நாரவி யம்பா ளுமைநா விலணு கநய புனைவு விதித்த கவி #வெண்பா #காதைகரப்பு

 

 

வினையகல நாளும் விநாயகனை யேத்தி முனைவா யுனது செயல் #குறள்வெண்பா இக்குறள் வெண்பா முதல் வெண்பாவினுள் மறைந்துள்ளது

 

கல்வி அணி செய்து உன்ன கை உள் வாரானையும் உந்து இகத்தை ஏறானை யோக உயர் நா ரவி அம்பாள் உமை நாவில் அணுக நய புனைவு விதித்த கவி

 

கல்வி அறிவை அணியாய் செய்து உன்னினால் கூட வாரானையும் ( கல்வி அறிவால் எட்டாதவன்) உந்து இகத்தை ஏறானை ( இவ்வுலகத்தை ஊழி காலத்தில் அழிப்பவனை) யோக உயர் நா ரவி ( யோகத்தால் உயர்ந்த சொல்லை உடைய சூரியனைப் போல் பிரகாசிக்கக் கூடிய - மௌனம் குறிக்க படுகின்றது - தக்ஷிணாமூர்த்தி )

அம்பாள் உமை (நமது) நாவில் அணுக நமக்கு நயம்பட கவியுரைக்க விதிக்கப் பட்டது ( சிவசக்தி அருளால் என அறிக)
படம்

   

 படம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...