வெள்ளி, 22 செப்டம்பர், 2023

மாலைமாற்று

 

மாவா தாழிகா காழிதா வாமா நீவா தூழிபாம் பாழிதூ வாநீ சாவா தேகவீ வீகதே வாசா மேவா தேதுபோம் போதுதே வாமே - கலிவிருத்தம்
 
மா வாது ( போர்- பாரதம்) அதில் ஆழியை ( சக்கராயுதம்) ஏந்திக் காத்தவனே எமக்கு உறுதி( காழி) தா அழகா ( வாமா) நீவாது ஊழி ( நீங்காது பல ஊழி வரினும்) பாம்புப் படுக்கையில் பாற்கடலில் (ஆழியில்) உள்ளத் தூயப் பாதை நீ ( தூ ஆ நீ )
 
சாவாது ஏக ( உனை ) ஈ ( எமக்கு அருள்க ) வீ கதே வாசா ( விரும்பத்தக்க உயர்ந்த கதியான வைகுண்டம் உறைவோனே) மேவாது ( உன்னுடன் பொருந்தாது) ஏது ( செல்வம் ) போம் ஏனென்றால் நீ போது தே ( பூ போன்ற இலக்குமியின் தேவன் ) வாமே ( அல்லவோ)
 
படம்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி