திங்கள், 20 நவம்பர், 2023

சிலேடை கலிப்பா

இருமடந்தை இணைந்திருக்க இலங்கொளியாய் நிற்பவன் திருமலையி லெழுந்தருளுந் திருவடியார் தற்பரன் செருவிருந்து செகுத்தெறிந்து செகந்தனையும் காப்பவன் அருமருந்து அலையமர்ந்த அமரர்குல வேந்தனே -தரவு கொச்சகக் #கலிப்பா 

 படம்

படம் 

 

இப்பாடல் மஹாவிஷ்ணு மேலும் கந்தன் மேலும் இரட்டுற மொழிவதாக அமைந்தது


பொருள் 1
மஹா விஷ்ணு :-
இருமடந்தை - ஸ்ரீ தேவி , பூதேவி
செரு - மஹாபாரதம்
அலையமர்ந்த - பாற்கடலில் வீற்றிருக்கும்
அமரர்குல - வாமன அவதாரத்தில் இந்திரனின் தம்பியாக அவதரித்தார் பெருமாள்

பொருள் 2 முருகன் :- இருமடந்தை - தேவயானை, வள்ளி தேவிகள் திருமலை - ஸ்ரீ சைலம் செரு - சூரபத்மனுடன் போர் அலையமர்ந்த- திருச்சீரலைவாய் அமரர்குல வேந்தன் - அமரர் குலத்தைக் காத்த வேந்தன்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி