திங்கள், 20 நவம்பர், 2023

மடக்கு வெண்பா

பாரமர பாரமற பாதையுற பாமரர்கள் பாரமற பாராளும் பாங்குறவே - பாராளும் பாரமரர் பாரதப் பாரமரில் பாரமறப் பாரமர பாருதித்தாய்ப் பார்த்து

 

 

பார் அமர பாரம் மற பாதை உற பாமரர்கள்
பாரம் அற பாராள் உம் பாங்கு உறவே பார் ஆளும்
பார் அமரர் பாரதப் பாரமரில் பாரம் அறப்
பார் அமர பார் உதித்தாய் பார்த்து
பாமரர்கள் பாரம் மற ( மறந்து ) பாதையுற பாரில் அமர ( வாழ) ( கம்சனைக் கொன்றபின் மக்கள் நிம்மதியாக வாழ )
பாரம் அற பாராளும் ( புவியின் பாரம் நீங்கி அவளும் ) பாங்கு உறவே ( பொலிய அழகாக ) பாராளும் பாரமரர் ( இவ்வுலகையே ஆளத் தகுதியான பாரில் தேவர்களின் அம்சமான பாண்டவர்கள்
பாரதப் பாரமரில் ( மஹபாரதம் என்ற பாரளவில் நடந்த போரில் ) பாரம் நீங்கி பார் அமர ( அனைத்து துன்பங்குளும் நீங்கி இப்புவியில் ஆட்சி புரிய ) பார் உதித்தாய் பார்த்து
 
படம் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...