செவ்வாய், 21 நவம்பர், 2023

செவ்வேள் விருத்தம்

 படம்

 

ஆடு மயிலம ராறு முகன்றனை
நாடும் வரமெனக்                                    கருள்வாயே              

ஆதி சிவனுமை ஆரத் தழுவிய
சேயி னருள்பெறக்                                   கடவேனோ

 

வீடு மறுபடை வீறு குமரனே
வேழ முகவிறைக்                                     கிளையோனே   

வீதி வலம்வர சூர னுடலற
வேலை விடவல                                        கதிரேசா   

 

தேடு மடியவர் தேனி னினிப்புகழ்
வேத இசைதனில்                                     மகிழ்வோனே

தேவ பிடியுடன் வேட குறமகள்
சேவை தருவருள்                                     முருகோனே

 

பாடு  மடியவர் பாதை வகுத்திட  
பாயை மடித்தவன்                                  மருகோனே

பாவி தலையிலும் பாத துளியினைச்
சேர வழிகொடு                                         பெருமாளே  


'பாதி மதிநதி' திருப்புகழின் சந்தத்தை அடியொற்றி அமைந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி