வெள்ளி, 24 நவம்பர், 2023

மடக்கணி

மாறான் புகுந்த மடநெஞ்சில் வேறான் குடிபுகுமோ
மாறான் புகுந்த மடநெஞ்சில் வேறான் குடிபுகுமே
வேறான் புகுந்த மடநெஞ்சில் மாறான் குடிபுகுமோ
வேறான் புகுந்த மடநெஞ்சில் மாறான் குடிபுகுமே



1.மால் தான் புகுந்த மட நெஞ்சில் வேல் தான் குடி புகுமோ

( மயக்கமுற்ற நெஞ்சில் வேல் ( ஞானம்) இருக்குமோ? - இராது என்பது கருத்து

2. மாறான் புகுந்த மட நெஞ்சில் வேல் தான் குடிபுகுமே

மாற்றமே இல்லாத இறைவன் நெஞ்சில் குடி புகுந்த பின்னர் வேல் ( வெற்றியின் ஞானத்தின் குறியீடு) குடி புகுமே

3. ஏறான் புகுந்த மட நெஞ்சில் மால் தான் குடிபுகுமோ

சிவ பெருமான் புகுந்த நெஞ்சில் மயக்கம் குடி புகுமோ - புகாது என்பது கருத்து

4, ஏறான் புகுந்த மட நெஞ்சில் மால் தான் குடிபுகுமே

சிவ பெருமான் புகுந்த நெஞ்சில் திருமால் இருப்பார்


கடைசி இரண்டடிக்கு வேறு பொருளும் கொள்ளலாம்

3. வேல் தான் புகுந்த மட நெஞ்சில் மால் தான் குடிபுகுமோ
வேலவனின் அருள் புகுந்த நெஞ்சில் மயக்கம் வருமோ

4 வேல் தான் புகுந்த மட நெஞ்சில் மால் தான் குடிபுகுமே  
வேலவனின் அருள் புகுந்த நெஞ்சில் அவனது மாமனின் ( திருமாலின் ) அருள் இருக்கும் தான்

இரண்டாம் அடியில் மாறான் என்பதை மால் தான் ( திருமால் தான் ) என்றும் கொள்ளலாம்

படம்

படம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி