தனதனத் தனன தனதனத் தனன
தனதனத் தனன தனதனத் தனன தனதான
அறுமுகத் திறைவா வருமயிற் றலைவா
அயிற்கரத் துடைய அரற்கனற் புதல்வா வெனவோதி
உறுதவத் தடியா ருனைதினந் தொழுவா
ருயிர்குகை வுறைவா யுணர்ந்தெழ வருள்வா யுவப்போடே
இறுபவத் துழலு மிறைகழ லணுகா
விழிவனி னினைவி லிருளகற் றணைவா யுமைபாலா
சிறுகணப் பொழுதுங் கொடியினை விலகாத்
திருமணக் குறவா குடமுனிக் கிறைவா குமரேசா
அறு முகத்து இறைவா அருமயில் தலைவா
அயில் கரத்து உடைய அரன் கனல் புதல்வா என ஓதி
உறு தவத்து அடியார் உனை தினம் தொழுவார்
உயிர் குகை உறைவாய் உணர்ந்து எழ அருள்வாய் உவப்போடே
இறு பவத்து உழலும் இறைகழல் அணுகா
இழிவனின் நினைவில் இருள் அகற்று அணைவாய் உமைபாலா
சிறு கண பொழுதும் கொடியினை விலகா
திருமண குறவா குடமுனிக்கு இறைவா குமரேசா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக