புதன், 13 டிசம்பர், 2023

இரட்டுற மொழிதல்

பேயனை நஞ்சுண்டு பேறளித் தானைப் பிறங்குமதி
மாயனை மன்னு மதுரை யரசனை வானவர்க்குந்
தூயனை மன்றாடு மாக்கோவை ஈறிலாச் சோதியனை
வேயனை நாதனை மேதினிக்  கோனைத் தொழுமனனே 

கட்டளைக்கலித்துறை  

 

படம் 




பேயனை நஞ்சுண்டு பேறளித்தான் - பூதனையின் நஞ்சுண்டு அவட்கு பேறளித்தான்   

மாயன் , (வட) மதுரை அரசன் வானவர்க்கும் தூயவன் மன்றாடும் ஆக்களுக்கு கோன் ஈறிலாச் சோதியன் ( விஸ்வரூபம்)

வேயன் - புல்லாங்குழல் இசைப்பவன் மேதினிக் கோன் - ஜகந்நாதன்


பேயன் - பித்தன்  ஆலகால நஞ்சுண்டு அனைத்து உயிர்க்கும் பேறளித்தான் பிறங்கு மதிக்கும் மாயன் ( மனதிற்கு எட்டாதவன் ) மதுரை அரசனான சொக்கநாதர் . மன்றாடும் ( தில்லையில் ஆடும்) ஆக்கோ - பசுபதி ஈறிலாச் சோதியன் ( அண்ணாமலையார்) வேய் அ(ன்)னை நாதன் - வேயுறு தோளி பங்கன் மேதினிக் கோன் - விஸ்வநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி