வியாழன், 21 டிசம்பர், 2023

திருப்பாவை

அப்பாவி மக்கட் கலல்தரு மம்மா னழித்தொழிக்க வப்பாவி நீங்கி யமைதி நிலவவந் தானிறத்தா யப்பாவி செய்தரு ளாழி முகந்து வருணதேவ வப்பாவி மக்க ளழகுற நீராட மார்கழியே 

#கட்டளைக்கலித்துறை 

 

 

படம் 

 

மாயனைப் போற்று மனத்தாலும் வாக்காலும் மண்விழுங்கு வாயனைப் போற்று மகளிர் மனக்கள்ள வேணுகானத் தூயனைப் போற்றுச் சுகந்த மலராற் தொழுதுதினங் காய வருநிற்கு மூழினைப் போக்க கதியவனே

 #கட்டளைக்கலித்துறை  

படம் 

பாவையெம் பாவை படிக்கா துழல்கின்ற பண்பிலானின் பாவையெம் பாவைப் படித்துப் பலரும் புகழுரையார் பாவையெம் பாவை படித்துத் தெளிந்து பணிவுபெற்றாற் பாவையெம் பாவைப் படித்துப் பகர்வ திறைவிருப்பே 

 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி