ஆடவல்லா னாட்டமன்றோ அகிலமெல்லாங் காத்துநிற்கும் - அவனைத் தேடவல்லார் தேர்ந்தெடுத்த செகத்துரையுஞ் செப்புரையை நாடவல்லார் நாட்டமுற்று நலம்பெறுவர் வாழ்வதனில் - இதைப் பாடவல்லார் பேறுபெற்றார் பணிமதியான் பதம்பணிந்தே
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக