புதன், 10 ஜனவரி, 2024

ஆஞ்சநேயர் எண்சீர் விருத்தம்

 வஞ்சகத்தின் மேகநாதன் மாயசால மேவிய
    நஞ்சுமிழ்ந்த வம்புதாக்கி நித்திரையை வென்றவன்
அஞ்சுமாறு வீழ்ந்திருக்க அஞ்சிலின்றி வேகமாய்
   அங்கமேவு நஞ்சகற்ற அருமருந்தைத் தேடியே
சஞ்சிவினி மலைபெயர்த்துச் சடுதியிலே சேர்த்தவன்  
   நஞ்சிவனி னம்சமன்றோ நஞ்சறுக்க வல்லவன்
அஞ்சனையின் றவப்புதல்வ னன்புடைத்த சேவகன்
   சஞ்சலங்கட் போக்குவானே நாதனாம மோதியே  

 

மேகநாதன் - இந்திரஜித்
நித்திரையை வென்றவன் - இலக்குவன்
சஞ்சீவினி - சஞ்சிவினி
நஞ்சிவன் - நம் சிவன்  


படம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி