பழமுதிர்ச் சோலை பழமுதிர்ச் சோலை
யழகனைக் காண வழகனை காண
விழிவழித் தேட விழிவழித் தேட
வழிவழிப் பேறே வழிவழிப் பேறே
கலிவிருத்தம்
பழம் உதிர் சோலை பழ முதிர் சோலை
அழகனைக் காண அழகு அனை காண
இழிவு அழி தேட விழிவழி தேட
அழிவு அழி பேறே வழிவழி பேறே
அழகு அனை = வள்ளி, தேவானை
பழம் உதிர்ந்த சோலை ( ஒளவைக்கு முருகன் சுட்ட பழம் உதிர்த்த இடம் ) , அது பழைய முதிர்ந்த சோலை
அழகனைக் காண ( முருகனைக் காண) அழகு அனை காண ( வள்ளி தேவசேனையுடன்)
இழிவு அழி தேட ( இழிவு அழியுமாம் ) தரிசனம் கிட்ட
அழிவை அழித்து பேறை அளிப்பான், வழி வழி பல தலைமுறைக்கு அளிப்பான் அவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக