செவ்வாய், 23 ஜனவரி, 2024

மடக்கு வெண்பா

ஆறுதலை மாறுதலை சீறுதலை யாறுதலை
மாறுதலை வேறுதலைக் கூறவொணா வோருதலை
ஆறுதலை மாறுதலை சீறுதலை ஏறுதலை
தேறுதலைச் சேர்ந்தளிப்பான் சீர்
#வெண்பா



சீர் பிரித்து

ஆறு தலை மாறு தலை சீறு தலை ஆறு தலை மாறுதலை வேறுதலை கூற வொண்ணா ஓரு தலை
ஆறுதலை மாறுதலை சீறுதலை ஏறுதலை தேறுதலை சேர்ந்து அளிப்பான் சீர்

ஆற்றைத் தலையில் கொண்ட சிவபெருமானும் , மாறு தலை கொண்ட விநாயகரும் , சீறும் தலையைக் கொண்ட நரசிம்மரும் , ஆறு தலை கொண்ட முருகனும் , மாறுபட்டும் வேறுபட்டும் கூற ஒண்ணா ஒரு தலைவனாக ( ஓரு தலை) - ஒரே பரம்பொருளாக ;
ஆறுதல் மாறுதல் சீறுதல் ( அறசீற்றம்) ஏறுதல் தேறுதல் இவை அனைத்தும் சீராக அளிப்பான் ( நமக்கு)

 

murugan vinayagar | Lord shiva painting, Lord vishnu ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி