ஞாயிறு, 21 ஜனவரி, 2024

எண்ணலங்கார ஸ்ரீராமர் விருத்தம்

பத்திரதப் புத்திரனாய்ப் பாருதித்தான் ஒன்பதன்று
நித்திரையை வென்றவனும் நிலமகளும் உடன்வரவே
பெற்றவளின் சொற்கேட்டுப் பெருமைதருந் தவம்பூண    வனமேகி

சத்தியமே உருவெடுத்த  சான்றோளா மகலிகையின்
சாபமொழிந் தோடிடவே தாடந்தா னெண்டிக்குஞ்
சாற்றுபுக ழேயுலகும் போற்றிவரு மீறாறா                           யுறைவோனே

பத்தினியை யபகரித்த பஞ்சவிரு சிரவேந்தைப்  
பத்தனவன்  கடற்றாண்டி பந்தமிடத் திறமிருந்து
முத்தமனே நான்மறையி னுட்பொருளே செற்றுவக்கப்      பணிந்தானே   

சித்தமகிழ் முத்தமிழா னித்தியனின்  புகழுரைக்க
தத்துவமு மெனக்கருள்வாய் சத்திதனை நல்கிடுவாய்
சித்திதரு மீரெழுத்துச் சிலைப்பாணி யேகமூர்த்தி                  பெருமாளே

13 சீர் விருத்தம் 

Ramar Pattabhishekam Mysore... - International Ramayana ...


         சீர் பிரித்து
பத்து இரதப் புத்திரனாய்ப் பார் உதித்தான் ஒன்பது அன்று
நித்திரையை வென்றவனும் நிலமகளும் உடன் வரவே
பெற்றவளின் சொல் கேட்டுப் பெருமை தரும் தவம் பூண  வனம் ஏகி

சத்தியமே உருவெடுத்த சான்றோளாம் அகலிகையின்
சாபம் ஒழிந்து ஓடிடவே தாள் தந்தான் எண் திக்கும்
சாற்று புகழ் ஏழ் உலகும் போற்றி வரும் ஈறு ஆறாய்   உறைவோனே

பத்தினியை அபகரித்த பஞ்ச இரு சிர வேந்தைப்
பத்தன் அவன் கடல் தாண்டி பந்தம் இட திறம் இருந்தும்
உத்தமனே நான் மறையின் உள் பொருளே செற்று உவக்க பணிந்தானே

சித்தம் மகிழ் முத்தமிழால் நித்தியனின் புகழ் உரைக்க
தத்துவமும் எனக்கு அருள்வாய் சத்தி தன்னை நல்கிடுவாய்
சித்தி தரும் ஈர் எழுத்துச் சிலைப்பாணி ஏக மூர்த்தி பெருமாளே

பத்து இரதன் - தசரதன்
நித்திரையை வென்றவன் - இலக்குவன்
நில மகள் - சீதை
பெற்றவள் - கைகேயி
ஈறு ஆறு - வீடு பேறு அளிக்கக் கூடிய இறைவன்
பஞ்ச இரு சிர வேந்து - இராவணன்
பத்தன் - ஆஞ்சநேயன்
உத்தமன் , நான்மறையின் உட்பொருள், நித்தியன் - ஸ்ரீ ராமன்
ஈர் எழுத்து - ராம
 

பத்திலிருந்து ஒன்று வரை எண்கள் பயிலப் பட்டுள்ளன 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...