செவ்வாய், 23 ஜனவரி, 2024

நாராயணர் விருத்தம்

 வாரிதியு மஞ்சு மவன்சினந்தாற் கூறதுவே மிஞ்சு மதுநடந்தாற் போரதுவே யெஞ்சு மவனினைத்தாற் பாரிதுவே தஞ்ச மவனிணைத்தாள் சாரதியாய் வந்தும் வினைபுரிவான் மாருதியா லன்று நிலையறிந்தான் வாரணமே சொல்லு மவன்புகழே காரணமாய் நிற்குங் கருமுகிலே 6சீர் #விருத்தம்

 

 படம்

வாரிதியும் அஞ்சும் அவன் சினந்தால் கூறு அதுவே மிஞ்சும் அது நடந்தால் போர் அதுவே எஞ்சும் அவன் நினைத்தால் பார் இதுவே தஞ்சம் அவன் இணைத் தாள் சாரதியாய் வந்தும் வினை புரிவான் மாருதியால் அன்று நிலை அறிந்தான் வாரணமே சொல்லும் அவன் புகழே காரணமாய் நிற்கும் கரு முகிலே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி