சனி, 27 ஜனவரி, 2024

அருணகிரிநாதரின் கந்தரலங்காரச் சிறப்பு

பூவாற் புனைந்த வலங்கார நாளே புவிநிலைக்க மூவாப் புனையு மலங்கார மேது முருகனுக்கே நாவாற் புனைந்த வலங்கார நன்றென நாயகற்குப் பாவாற் புனைந்தா னலங்காரம் பத்திப் பெருக்கெடுத்தே #கட்டளைக்கலித்துறை

 

பூவால் புனைந்த அலங்காரம் நாளே, புவி நிலைக்க மூவாப் புனையும் அல்ங்காரம் ஏது முருகனுக்கே ? நாவால் புனைந்த அலங்காரம் நன்று என நாயகனுக்குப் பாவால் புனைந்தான் அல்ங்காரம் பத்திப் பெருக்கு எடுத்தே

 

படம்  

பூவால் புனையப்படும் மாலை ஒரே நாளே தங்கும் , புவியில் நாளும் நிலைக்க , என்றும் வாடா அலங்காரம் என்பது எது முருகனுக்கு ? இவ்வாறு சிந்தித்து நாவால் அலங்கரிக்கத் துணிந்தார் அருணகிரிநாதர் , இதனால் பிறந்தது அவர் பக்திப் பெருக்கெடுத்துப் பாக்களால் தனது நாயகனை அலங்கரித்த கந்தரலங்காரம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி