சனி, 27 ஜனவரி, 2024

காசி வெண்பா

காசினியிற் காசியென பாசமற நாசமற வாசிதரு மீசனவன் றாசனவன் - தேசமுடை வேளையிலே வீதியுலா வீற்றுவந்தான் வானுலக வேளனையா மாறழகைப் பார்த்து #வெண்பா

 

படம் 

காசினியில் காசி என பாசம் அற நாசம் அற ஆசி தரும் ஈசன் அவன் தாசன் அவன் தேசமுடை வேளையிலே வீதி உலா வீற்று உவந்தான் வானுலக வேள் அ(ன்)னையாம் ஆறு அழகைப் பார்த்து 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மூவாறு கண்களும் இன்னிசை வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

மூவாறு கண்களு முத்தமிழ் மெய்யாக மூவீ ரிருதோளு முந்து தமிழுயிராய்ச் சேவன் மயில்வேற் சிவமைந்தன் சேவைதர மேவுவினை யாகாதோ வீண்