புதன், 31 ஜனவரி, 2024

வேலவன் வெண்பா

மாமனைப் போற்கள்வன் மாமியைப் போற்செல்வன் காமனைப் போலழகன் கந்தையன் - சோமனைத் தாங்குமையன் போற்குருவாந் தந்திமுகத் தண்ணற்போ லேங்குமன்பர்க் கீவா னெளிது #வெண்பா

 

 

மாமனைப் போல் கள்வன் மாமியைப் போல் செல்வன் காமனைப் போல் அழகன் கந்தையன் சோமனைத் தாங்கும் ஐயன் போல் குருவாம் தந்தி முகத்து அண்ணன் போல் எங்கும் அன்பர்க்கு ஈவான் எளிது

 

படம்  

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி