வியாழன், 11 ஜனவரி, 2024

மாருதி கட்டளைக்களித்துறை

காற்றின் புதல்வா கமலத் திறைவனாய் கற்பத்தீற்றி லேற்றம் பெறுவா யிதுவு முனக்கோ ரிதந்தருமோ கூற்று மொழிந்த குணசீல வைகுந்த வேற்றமறு போற்றுவாய் நாதன் புகழ்கதை யென்றும் புவியிருந்தே 

 #கட்டளைக்கலித்துறை

 

படம் 

காற்றின் புதல்வா கமலத்து இறைவனாய் கல்பத்து ஈற்றில் ஏற்றம் பெறுவாய் இதுவும் உனக்கு ஓர் இதம் தருமோ கூற்றும் ஒழிந்த குணசீல வைகுந்த ஏற்றம் மறு போற்றுவாய் நாதன் புகழ் கதை என்றும் புவி இருந்தே

 

வாயு புத்திரனான மாருதி அதுத்த கல்பத்தில் பிராமனாக ஆவார் என்பது புராணக் கருத்து , எனினும் அதில் அவர்க்கு இன்பமிருக்குமோ ? இராமாவதாரம் முடிந்து ஸ்ரீமன் நாராயணன் அவரை வைகுந்தத்திற்கு அழைத்த போது கூட அங்கு இராமாவதாரத்தை அனுபவிக்க இயலாதே என்று புவியிலேயே தங்கிவிட்டார் அன்றோ இராமாயணம் படிக்கும் இடத்தில் எல்லாம் இருந்து அனுபவிக்க?  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி