வெள்ளி, 12 ஜனவரி, 2024

அசோக வன மடக்குக் கலித்துறை

 1.
இராமன் மொழிந்த விசையே நினைவா யிருந்துவந்தே
யிராமன் மொழிந்த விசையே நினைவா யிருந்துவந்தே
னிராமன் மொழிந்த விசையே நினைவா யிருந்துவந்தே
னிராமன் மொழிந்த விசையே நினைவா யிருந்துவந்தே
-கட்டளைக் கலித்துறை

2.
இராமன் மொழிந்த விசையே நினைவா யிருந்திளைத்தே
னிராமன் மொழிந்த விசையே நினைவா யிருந்திளைத்தே
னிராமன் மொழிந்த விசையே நினைவா யிருந்திளைத்தே
யிராமன் மொழிந்த விசையே நினைவா யிருந்திளைத்தே
-கட்டளைக் கலித்துறை 

Pin on Botanical Beauties

சீதா பிராட்டிக்கும் ஆஞ்சநேயருக்கும் அசோக வனத்தில் நடந்த ஒரு கற்பனை உரையாடல் .

சீர் பிரித்து

இரா மன் மொழிந்த விசையே நினைவாய் இருந்து உவந்தே
இரா மன் மொழிந்த விசையே நினைவாய் இருந்து உவந்தேன்
இராமன் மொழிந்த விசையே நினைவாய் இருந்து வந்தேன்
இராமன் மொழிந்த விசையே நினைவாய் இருந்து உவந்தே

இரவின் மன்னான ( நிலவு ) மொழிந்த விசை (காதல் உணர்ச்சி) நினைவாக இருந்து உவந்தே
கரிய நிறங்கொண்ட  எனது தலைவனான இராமபிரான் தனது சொற்களின் ஈர்ப்பால்  என்னைக் கவர்ந்த நினைவுகளை எண்ணி உவந்து இருந்தேன்

 
அவர் (இராமபிரான) தனது (சிறுவயதில்) சந்தித்த வெற்றிகளை பற்றிக் கூறிய நினைவுகளை எண்ணி , அவர் கூறும் மனம்கவரும் விதத்தில் இருந்தேன் உவந்தே

இராமல் மொழிந்த இசையே நினைவாய் இருந்து இளைத்தேன்
இராமன் மொழிந்த விசையே நினைவாய் இருந்து இளைத்தேன்
இராமன் மொழிந்த விசையே நினைவாய் இரும் திளைத்தே
இராமன் மொழிந்த விசையே நினைவாய் இரும் திளைத்தே

ஆனால் இப்போது அவர் என்னுடன் இல்லாததால் ( இராமல்) 

அவர் மொழிந்த இசை போன்ற இனிய மொழிகளை எண்ணி எண்ணி இளைத்தேன்
அதே போல் அவர்(இரா மன்- என்னுடன் இல்லாத தலைவன்) வெற்றியைப் பற்றிச்  சொல்லும் சொற்களும் இல்லாமல் அந்த நினைவில் இளைத்தேன் ( பிரிவால்)

இப்போது ஆஞ்சநேயர் விடை தருகிறார்

இராமன் மொழிந்த வெற்றிகரமான நினைவுகளை எண்ணி திளைத்து இருப்பீர்

அதே போல வெகு விரைவில் அவர் இராவணனை வென்று வெற்றி வாகை சூடி தங்களை அழைத்துச் செல்வார் என்பதையும் எண்ணி திளைத்து இருங்கள் வருத்தம் வேண்டாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...