திங்கள், 12 பிப்ரவரி, 2024

கதிரவ மடக்கு வெண்பா

படியாளுந் தீவரையன் பார்த்துய்யத் தீர்த்த
நெடியா னினைத்துதிக்க வென்று  படித்தான்
படியாளுந் தீவரையன் பார்த்துய்யத் தீர்த்த
நெடியா னினைத்துதிக்க வென்று

#வெண்பா 

படம்

படி ஆளும் தீ வரையன் பார்த்து உய்யத் தீர்த்த
நெடியான் நினைத்துத் உதிக்க வென்று படித்தான்
படி ஆளும் தீவு அரையன் பார் துய்ய தீர்த்த
நெடியான் நி(ன்)னை துதிக்க என்று

படி ஆளும் தீ வரையன்  பார்த்து உய்ய வென்று உதிக்க -  உலகத்தை ஆளும் நெருப்பை வரைவாகக் கொண்ட கதிரவனைப் பார்த்து உய்ய வென்று உதிக்க

தீர்த்த நெடியான் படித்தான் - கடலை விழுங்கியதால் , அதனை விட நெடியவனான அகத்தியன் படித்தான் (உரைத்தான்)


படி ஆளும் தீவு அரையன் - உலகை ஆளும் இலங்கைத் தீவின் அரசனான இராவணன்

பார் துய்ய தீர்த்த - உலகம் தூய்மையாகும் பொருட்டு முடித்த

நெடியான் நின்னை துதிக்க என்று - நெடுமாலை ( இராமனை) கதிரவனான உன்னைத் துதிக்க என்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி