சனி, 10 பிப்ரவரி, 2024

விநாயகர் மடக்கு வெண்பா

 

பணத்தை மதிக்கை யெணத்தைத் தணிப்பாய்
கணத்தைத் துதிக்கை பணிந்து - வணத்தை
பணத்தை மதிக்கை யெணத்தைத் தணிப்பாய்
கணத்தைத் துதிக்கை பணிந்து
#வெண்பா 

Sri Ganesha Sthothrams

பணத்தை மதிக்கை எ(ண்)ணத்தைத்  தணிப்பாய்
கணத்தைத் துதிக்கை பணிந்து - வ(ண்)ணத்து ஐ  
பணத்து ஐ மதிக்கு ஐ எ(ண்)ணத்தை தணிப்பாய்
கணத்து ஐ துதிக்கை பணிந்து

பணத்தை மிகுதியாக மதிக்கும் எண்ணத்தைத் தணிப்பாய் கணத்தை (நேரத்தைப்) போற்றப் பணிந்து
வணத்து ஐ (அழகிற்கு தலைவியான உமையும்) பணத்து ஐ (செல்வத்திற்கு தலைவியான இலக்குமியும்) மதிக்கு ஐ (சரஸ்வதியும்) அவர்களது எண்ணத்தை (நம் கர்மாவின் படி நமக்கு நல்லவை தீயவை அருள) தணிப்பாய் (இடர் கொடுக்கக் கூடிய) கணத்து ஐ (கணங்களின் தலைவரான கணபதியின்) துதிக்கையைப் பணிந்து. விநாயகரை முதலில் துதித்தால் முப்பெரும் தேவிகளும் மகிழ்ந்து அருள்வர் என்றவாறு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...