திங்கள், 12 பிப்ரவரி, 2024

ஏழு மலையான் வெண்பா

அலையப்பா போதமர்வாண் மார்புறையு மேழு
மலையப்பா வேங்கடவா மாந்தர்  அலையப்பா
வுன்னோக்கை வேண்டி யுனநாம மார்ப்பரித்துத்
தன்னோக்கை வெல்லுந் தரத்து
#வெண்பா 

படம்

அலையப்பா போது அமர்வாள் மார்பு உறையும் ஏழு மலையப்பா
வேங்கடவா மாந்தர் அலை அப்பா
உன்னோக்கை வேண்டி உன நாமம் ஆர்ப்பரித்து
தன் நோக்கை வெல்லும் தரத்து


கடலில் உறங்கும் அப்பனே , அலர்மேல் மங்கை இலக்குமி மார்பு அமரும்
ஏழு மலை அப்பனே வேங்கடவா

உன் நோக்கை வேண்டி உனது நாமம் ஆர்ப்பரித்து தன் நோக்கை வெல்லும் தரத்து ( உயர)

மாந்தர் அலை  அப்பா! மாந்தர் அலையாய்த் திரள்வது என்ன வியப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...