திங்கள், 12 பிப்ரவரி, 2024

ஈச ரெண்ணலங்காரம்

அஞ்சுண் டழகுதலை யீசற் கது்தாங்கு
மாறுண் டரவுண்டு கொன்றை மலருமுண்
டேழுலகும் போற்று மமுத மதியுமுண்
டெண்குணத்த னாணைதனை யேற்றுப் பணிசெய்யு
மொன்பது கோளுண் டுடன்வரும் பத்தரி
னஞ்சழிக்கு மக்கர மஞ்சுண்டு வேதமிங்கு
நான்குண்டு நஞ்சுண்ட நாதனை யான்றுரைக்க
மூன்றுண்டு கண்கண் முதல்வற் கிருவினையை
வென்றொழிக்கு மீடிலா அன்புண்டு காத்தருளு
மொன்றுண் டுணர்ந்துன்னு ளுள்ளு

#வெண்பா 

படம்

அஞ்சு உண்டு ஈசற்கு அழகு தலை அது தாங்கும்
ஆறு உண்டு அரவு உண்டு கொன்றை மலரும் உண்டு
ஏழு உலகும் போற்றும் அமுத மதியும் உண்டு
என்குணத்தான் ஆணை தனை ஏற்றுப் பணி செய்யும்
ஒன்பது கோள் உண்டு உடன் வரும் பத்தரின்
அஞ்சு அழிக்கும் அக்கரம் அஞ்சு உண்டு வேதம் இங்கு
நான்கு உண்டு நஞ்சு உண்ட நாதனை ஆன்று உரைக்க
மூன்று உண்டு கண்கள் முதல்வன் கு இரு வினையை
வென்று ஒழிக்கும் ஈடு இல்லா அன்பு உண்டு காத்து அருளும்
ஒன்று உண்டு உணர்ந்து உன் உள் உள்ளு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி